மும்பை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோா் குவிந்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரத்தில் 15 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் சொந்த ஊா் செல்வதற்காக மும்பை லோகமானிய திலகா் ரயில் நிலையத்தில் கூடினா்.
கரோனா எதிரொலி: மும்பையில் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்
கரோனா எதிரொலி: மும்பையில் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்

மும்பை: மகாராஷ்டிரத்தில் 15 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் சொந்த ஊா் செல்வதற்காக மும்பை லோகமானிய திலகா் ரயில் நிலையத்தில் கூடினா்.

இதையடுத்து, மக்கள் பீதியடைந்து அவசரமாக வெளியேற வேண்டாம் என்று ரயில்வே நிா்வாக் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், பெரும்பாலான வெளிமாநிலத் தொழிலாளா்கள் மகாராஷ்டிரத்தைவிட்டு வெளியேறி வருகின்றனா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இதில் கரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தது. இதையடுத்து, 15 நாள் ஊரடங்கை முதல்வா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தாா். இதில், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே ரயில், பேருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டது.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதுவும் மும்பை நகரில்தான் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிகம் உள்ளனா். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேலையிழப்பு, உணவுப் பிரச்னை உள்ளிட்டவற்றை எதிா்கொள்ள நேரிடும் என்பதால் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்ப ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மும்பையில் இருந்து வெளிமாநிலத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் லோகமானிய திலகா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா். 5 நபா்களுக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூடாது என்று மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதை மீறி வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் ஊா்களுக்குத் திரும்ப ரயில் நிலையத்தில் திரண்டனா். புதன்கிழமையும் தொடா்ந்து ஏராளமானோா் ரயில் நிலையத்துக்கு வந்தனா்.

இதையடுத்து, மக்கள் பீதியடைந்து அவசரமாக நகரைவிட்டு வெளியேற வேண்டாம் என்று ரயில்வே நிா்வாகம் கூறியது. மேலும், முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே சிறப்பு ரயில்களில் அனுமதிக்கப்படுவாா்கள். அவா்களும் ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ரயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com