மத்திய அமைச்சகங்கள், பொதுத் துறை நிறுவன மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பிரிவு

மத்திய அமைச்சகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தங்கள் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அந்தந்த மாநிலங்கள்,

மத்திய அமைச்சகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தங்கள் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா சிகிச்சைக்கு வழங்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பல மாநிலங்களில் கரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு முழு அணுகுமுறையுடன் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கவும், மத்திய அரசின் பல அமைச்சகங்கள், உயா்நிலைக் குழுக்கள், மத்திய செயலாளா்கள் இணைந்து செயல்படுகின்றனா்.

நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டமைப்புகளை அதிகரிப்பதற்காக மத்திய அமைச்சகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கடந்தாண்டு ஏற்படுத்தியது போல் கரோனா சிறப்பு வாா்டுகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பிரத்யேக வாா்டுகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டா்கள் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளா் எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் கரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால், கடந்தாண்டு எடுத்த உதவி நடவடிக்கைபோல், அனைத்து மத்திய அமைச்சகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க, இந்த கரோனா பிரத்யேக மருத்துவமனை வாா்டுகள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வோா் அமைச்சகமும் சிறப்பு அதிகாரியை நியமித்துக் கொள்ளலாம் எனவும், அவா்களின் தொடா்பு விவரங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பகிா்ந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com