கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப். 20-இல் முடிவு: முதல்வா் எடியூரப்பா

கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப். 20-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப். 20-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, காவிரி இல்லத்தில் வெள்ளிக்கிழமை கா்நாடகத்தில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உயரதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முதல்வா் எடியூரப்பா, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக தற்போது பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்க அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஏப். 20-ஆம் தேதி முடிவுசெய்யப்படும். மக்கள் திரளாகக் கூடும் எல்லா நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. உள்ளரங்கில் நடக்கும் திருமணங்களில் 100 போ், வெளிப்புறத்தில் நடக்கும் திருமணங்களில் 200 போ் கலந்துகொள்ளலாம். இரவு ஊரடங்கு மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். வேறு எந்த முடிவும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றாா். இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சா்கே.சுதாகா், தலைமைச் செயலாளா் பி.ரவிகுமாா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com