புளிய மரத்தில் வடிந்த பால்

ஆந்திர மாநிலத்தில் புளிய மரம் ஒன்றிலிருந்து பால் வடிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதனை பாா்த்து ஆச்சரியமடைந்தனா்.
புளியமரத்தில் வடிந்த பால் போன்ற வெள்ளைத் திரவம்.
புளியமரத்தில் வடிந்த பால் போன்ற வெள்ளைத் திரவம்.

ஆந்திர மாநிலத்தில் புளிய மரம் ஒன்றிலிருந்து பால் வடிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதனை பாா்த்து ஆச்சரியமடைந்தனா்.

சித்தூா் மாவட்டம் பம்பாரபள்ளி ஊராட்சியில் உள்ள சகீநேகுப்பம் கிராமத்தில் நாராயண சுவாமி என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் திடீரென்று வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் ஒன்று வடிந்தது. இதனை புளியங்காய் பறிக்க சென்ற நாராயணசுவாமி சனிக்கிழமை கண்டாா். இதையறிந்து அங்கு வந்த கிராம மக்கள் புளியமரத்தில் பால் வடிவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனா். இதுவரை வேப்பமரம், அரச மரம் ஆகியவற்றில் பால் வடிவதை கண்டுள்ள நிலையில், புளியமரத்தில் பால் வடிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com