ஹரியாணாவில் வார இறுதி ஊரடங்கு இல்லை: முதல்வர்

ஹரியாணாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில், வார இறுதி ஊரடங்கு இருக்காது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 
​ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர்
​ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர்

ஹரியாணாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில், வார இறுதி ஊரடங்கு இருக்காது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

ஏப்ரல் 17 முதல் வார இறுதி ஊரடங்கு விதிக்கப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் போலியானது என்று தகவல் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அந்தத்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுவதாவது,

கரோனா வழக்குகள் அதிகரித்த போதிலும், தொழில்துறை நடவடிக்கைகள் மாநிலத்தில் தடையின்றி இயங்கும் என்று கூறினார். 

கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் தொழில்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததைப் போலல்லாமல், இந்த முறை அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது. எனவே தொழில்துறை நடவடிக்கைகள் சீராக இயங்கும் என்று அவர் கூறினார். 

இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரோன தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஏப்ரல் 30 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com