மகாராஷ்டிரத்தின் கோரிக்கையை ஏற்றது இந்திய ரயில்வே

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுமாறு மகாராஷ்டிர அரசு வைத்த கோரிக்கையை இந்திய ரயில்வே ஏற்றுக் கொண்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஆக்ஸிஜன் உருளைகளின் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜனை ரயில் மார்கமாகக் கொண்டு செல்ல இந்திய ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது.

ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திரவ நிலையிலான ஆக்ஸிஜன் வாயு நிரப்பிய கிரையோஜெனிக் கண்டெய்னர்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com