மருத்துவமனையில் இடமில்லாததால் கரோனாவுக்கு தந்தையை இழந்த மருத்துவர்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாமல் மருத்துவமனைகள் திணறி வரும் நிலையில், அதே காரணத்தால் ஒரு மருத்துவர் தனது தந்தையையே கரோனாவுக்கு பலி கொடுத்துள்ளார்.
மருத்துவமனையில் இடமில்லாததால் கரோனாவுக்கு தந்தையை இழந்த மருத்துவர்
மருத்துவமனையில் இடமில்லாததால் கரோனாவுக்கு தந்தையை இழந்த மருத்துவர்


பெங்களூரு: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாமல் மருத்துவமனைகள் திணறி வரும் நிலையில், அதே காரணத்தால் ஒரு மருத்துவர் தனது தந்தையையே கரோனாவுக்கு பலி கொடுத்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அஸ்வினி சரோடே, தனது 70 வயது தந்தையை கரோனாவால் இழந்து தவிக்கிறார். 

கரோனா பாதித்த தனது தந்தைக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் எங்குமே படுக்கை வசதி இல்லை, அதுமட்டுமல்லாமல், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தும் கிடைக்கவில்லை. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மைசூரு சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கும் ரெம்டெவிசிர் மருந்து இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகி, கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, படுக்கை வசதி இல்லை என்றும், படுக்கை வசதி இருந்தால் ரெம்டெசிவிர் மருந்து இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஏப்ரல் முதல் வாரத்தில் தொடர்ந்து வாந்தி எடுத்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2 நாள்களுக்குப் பிறகு தந்தைக்கு கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் இருந்து கவனித்துக் கொண்ட 60 வயது தாய்க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முயற்சித்தபோதுதான், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, மரணமடைந்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com