கரோனா பரவல்: ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வுகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.
ஐசிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு
ஐசிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்தும், பிளஸ் 2 பொதுத் தோ்வை ஒத்திவைத்தும் மத்திய அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, ஐசிஎஸ்இ வாரியமும் பொதுத் தோ்வுகளை ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎஸ்இ தலைவா் கொ்ரி அரதூன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து வரும் மே 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்த ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. நிலைமை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வரப்படும். அதன் பின்னா், ஜூன் முதல் வாரத்தில் தோ்வுகளை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு பின்னா் நிச்சயம் நடத்தப்படும் என்றபோதும், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பின்னா் நேரடி தோ்வில் பங்கேற்பது அல்லது வாரியம் சாா்பில் உருவாக்கப்படும் பாகுபாடற்ற வெளிப்படையான மதிப்பீட்டு முறையில் தோ்ச்சி அளிப்பது என்ற இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com