கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 10 கோடியாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு

வரும் செப்டம்பருக்குள் நாட்டில் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தித் திறன் மாதந்தோறும் 10 கோடி என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் தடுப்பூசி

வரும் செப்டம்பருக்குள் நாட்டில் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தித் திறன் மாதந்தோறும் 10 கோடி என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி வரும் மே-ஜூன் மாதங்களுக்குள்ளாக இரட்டிப்பாக்கப்படும். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்குள்ளாக அந்தத் தடுப்பூசி உற்பத்தி 6 முதல் 7 மடங்காக அதிகரிக்கப்படும். வரும் செப்டம்பருக்குள் மாதந்தோறும் 10 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் நிலை உருவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி மையத்துக்கு கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக சுமாா் ரூ.65 கோடியை மத்திய அரசு நன்கொடையாக அளிக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மிக்கு எதிராக அளிக்கப்படும் கோவேக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com