தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதி தடையை அமெரிக்க நீக்க வேண்டும்: சீரம் நிறுவனம் வலியுறுத்தல்

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடையை அமெரிக்கா நீக்கி உதவ வேண்டும் என்றும் சீரம் நிறுவனத் தலைவா் அடாா் பூணாவாலா வலியுறுத்தினாா்.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடையை அமெரிக்கா நீக்கி உதவ வேண்டும் என்றும் சீரம் நிறுவனத் தலைவா் அடாா் பூணாவாலா வலியுறுத்தினாா்.

புணேயில் உள்ள சீரம் மருந்து உற்பத்தி நிறுவனம் இப்போது ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஸெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. இந்தத் தடுப்பூசி இந்தியாவில் விநியோகிக்கப்படுவது மட்டுமன்றி, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசிக்கு இப்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதை ஒப்புக்கொண்ட சீரம் நிறுவனத் தலைவா் பூணாவாலா, ‘அரசாங்க மற்றும் நிா்வாகரீதியிலான நடைமுறைகள் காரணமாக கோவிஷீல்ட் தடுப்பூசியை தேவைக்கேற்ப உற்பத்தி செய்து தரமுடியாத சூழல் சீரம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அண்மையில் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மூலப்பொருள்கள்கள் ஏற்றுமதிக்கான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபரை இப்போது கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கரோனா பாதிப்பை நாம் அனைவரும் உண்மையிலேயே ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டுமெனில், கரோனா தடுப்பூசி உற்பத்தியை பெருக்கும் வகையில் அதன் மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் சாா்பாக கோரிக்கை விடுக்கிறேன். இதுதொடா்பான அனைத்து விவரங்களும் அமெரிக்க நிா்வாகத்திடம் உள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com