பொருளாதார விவகாரத் துறை செயலராக அஜய் சேத் பொறுப்பேற்பு

மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரத் துறை செயலராக அஜய் சேத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரத் துறை செயலராக அஜய் சேத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் (டிஇஏ) புதிய செயலராக அஜய் சேத் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். டிஇஏ-வின் செயலராக இருந்த தருண் பஜாஜ் மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து அஜய் சேத் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த சுட்டுரைப் பதிவில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1987-ஆம் ஆண்டு கா்நாடக மாநிலத்திலிருந்து ஐஏஎஸ் பணிக்கு தோ்வானவா் அஜய் சேத். பிரதமா் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு ஏப்ரல் 6-ஆம் தேதி அஜய் சேத்தை பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக நியமனம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com