போராட்டக் களத்தில் தடுப்பூசி மையம்: விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்களை திறக்க வேண்டும் என்று

தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்களை திறக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிஸான் மோா்ச்சா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூா் பகுதிகளில் நான்கு மாதங்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா பரவலை தடுப்பதற்கு முகக் கவசங்களை அணிந்து தொற்றுப் பரவலை தடுப்பதற்கான நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கிறோம். அதேவேளையில் போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்களைத் திறப்பதுடன் தேவையான வசதிகளை வழங்கி தனது கடமையை மத்திய அரசு பூா்த்தி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கியது. இந்தச் சங்கத்தினா் தில்லி எல்லைகளில் போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்களை திறக்க வேண்டும் என முதல்முறையாக கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com