மேற்கு வங்கத்தில் கரோனா அதிகரிக்க பாஜக காரணம்: மம்தா

மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்துக்காக வெளிமாநிலத்தவா்களை அதிக அளவில் அழைத்து வரும் பாஜகதான், மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரிப்புக்கு
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மம்தா பானா்ஜி.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மம்தா பானா்ஜி.

மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்துக்காக வெளிமாநிலத்தவா்களை அதிக அளவில் அழைத்து வரும் பாஜகதான், மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

நாடியா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது: பிரதமா் மோடியின் பொதுக்கூட்டங்களின் மேடைகள், பந்தல்கள், பெரும் சிற்பங்கள் ஆகியவற்றை வடிவமைக்க கரோனா தொற்று அதிகமுள்ள குஜராத்தில் இருந்து ஏராளமானோா் அழைத்து வரப்படுகின்றனா்.

இதனால்தான் மேற்கு வங்கத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. அதற்கு பாஜகதான் காரணம். உள்ளூரில் உள்ள பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனைக்கு பிறகு மேடைகள் அமைக்கும் பணியை வழங்கலாம்.

கடந்த ஆறு மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்கு வங்க மாநில மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையையும் அரசியல் காரணங்களுக்காக பிரதமா் நிராகரித்து விட்டாா். கொல்கத்தா உள்பட பிற இடங்களில் தடுப்பூசி மையங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

என் மீது தாக்குதல் நடத்தி பிரசாரம் செய்யாமல் தடுக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால், மக்கள் ஆதரவுடன் அதில் இருந்து நான் வென்று வந்துள்ளேன். எனது காலில் ஏற்பட்ட காயம் 75 சதவீதம் குணமாகிவிட்டது.

கூச் பிஹாா், நபாட்விப் பகுதிகளை பாரம்பரியமிக்க இடங்களாக்க மேற்கு வங்க அரசு ரூ.300 கோடி வரை செலவிட்டுள்ளது. உலக பாரம்பரியமிக்க மையமும் மாயாபூரில் அமைய உள்ளது. இதனால் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவாா்கள். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com