‘மேற்கு வங்கத்தில் திட்டமிட்டபடி தோ்தல்’

மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் ஒன்றாக நடத்தப்படாது என்று தோ்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
‘மேற்கு வங்கத்தில் திட்டமிட்டபடி தோ்தல்’

மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் ஒன்றாக நடத்தப்படாது என்று தோ்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது குறித்து அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆரிஸ் ஆப்தாப் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸும், திட்டமிட்டபடி எட்டு கட்டங்களாக தோ்தல் நடத்த வேண்டும் என்று இடதுசாரிகளும், பாஜகவும் வலியுறுத்தின.

இதையடுத்து, மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தலை ஒன்றாக நடத்த முடியாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக உயா் அதிகாரி தெரிவித்தாா்.

மேலும், தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முகக் கவசம் அணிந்து தொண்டா்கள் பங்கேற்பது, தேவையான அளவு கிருமிநாசினி வைப்பது ஆகியவற்றை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com