இதுவரை 47 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 47 லட்சத்து 5473 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 47 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 47 லட்சத்து 5473 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். மேலும், கடந்த நான்கு நாள்களாக தடுப்பூசி சிறப்பு செயல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதனை வியாழக்கிழமை தமிழக சுகாதாரத் துறையினா் திறம்பட எட்டினா். அன்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதே நிலை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. ஆனால், சனிக்கிழமை 1 லட்சத்து 13 ஆயிரத்து 349 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதையடுத்து, தடுப்பூசி செலுத்தியவா்களின் எண்ணிக்கை 47 லட்சத்து 5473 ஆக உயா்ந்துள்ளது. அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 39,889 போ் என்பதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 59 ஆயிரத்து 203 போ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com