இமாசலில் உண்டு - உறைவிடப் பள்ளியில் 49 பேருக்கு கரோனா

இமாசல பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் உண்டு - உறைவிடப் பள்ளியில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 49 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சோலன் மாவட்டத்தில் தரம்பூர் நகரத்திற்கு அருகில் பைன் கிரோவ் பள்ளியில் 49 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் அப்பள்ளியில் இதுவரை 150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக துணை ஆணையர் கே.சி.சாமன் கூறுகையில், 

தரம்பூர் மற்றும் சுபாத்து ஆகிய இடங்களில் உள்ள பைன்கிரோவ் பள்ளியில் நிலைமை ஆபத்தாக உள்ளதையடுத்து, இரு பள்ளிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, சம்பா மாவட்டத்தின் உறைவிடப் பள்ளியான டல்ஹெளசி பப்ளிக் பள்ளியில் 122 பேருக்குத் தொற்று பதிவாகியது.  அவற்றில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்கள் ஆவார். 

கடந்த மாதம் ஏப்ரல் 21 வரை மாநில பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டாலும், உறைவிடப் பள்ளிகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

சோலனைத் தவிர, காங்க்ரா, உனா மற்றும் சிர்மோர் போன்ற பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com