'கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கட்டணமில்லை'

கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் தெரிவித்துள்ளார்.
கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கட்டணமில்லை
கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கட்டணமில்லை


புது தில்லி: கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் தெரிவித்துள்ளார்.

எனது அறிவிக்கு எட்டிய வகையில், கரோனா வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுநெறிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

நாங்கள் ஆக்ஸிஜன் உருளைகளை கொள்முதல் செய்துள்ளோம். ஒரு ரயில் பெட்டிக்கு இரண்டு ஆக்ஸிஜன் உருளைகள் வழங்கப்படும், அதன்பிறகு ஆக்ஸிஜன் உருளைகளில் வாயுவை நிரப்பிக் கொள்வது, உள்ளிட்ட இதரப் பணிகளை மாநில அரசுகள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே சார்பில் இதுவரை 4,0052 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com