'புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் பழி போடுகிறது மத்திய அரசு' - ராகுல் காந்தி

இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் தற்போது பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமை என்று ன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தாமல் கரோனாவை பரப்புவதாக மத்திய அரசு அவர்களை குறை கூறுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையில் அவர்களின் வங்கிக்கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். 

மாறாக, கரோனாவைப் பரப்புவதாக கூறும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். நேற்று தில்லியில் ஒரு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தில்லியில் இருந்து புறப்பட்டனர். அதேபோன்று வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com