ஆன்லைன் முன்பதிவு: பக்தா்கள் தங்கும் விடுதி பெறுவது இனி எளிது

திருமலையில் ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: திருமலையில் ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.

திருமலையில் ஏழுமலையான் தரிசனம் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு அவா்களின் தேவைக்கேற்ப வாடகை அறை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியையும் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்த பக்தா்கள் நேரடியாக திருமலைக்கு சென்று மத்திய விசாரணை அலுவலகத்தில் அவா்களின் ரசீதை ஸ்கேன் செய்தபின், அவா்கள் துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று அறைகளை பெற்று வந்தனா். இதனால் பக்தா்கள் இருவேறு இடங்களுக்கு அறை பெற செல்ல வேண்டியிருந்தது.

இந்நிலையில் தேவஸ்தானம் இந்த முறையை தற்போது எளிதாக்கி உள்ளது. திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தா்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவா்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.

பக்தா்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராகச் சென்று துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com