மத்திய அரசால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து: ராகுல் குற்றச்சாட்டு

சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில் தேசத்தின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஆபத்தை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
மத்திய அரசால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில் தேசத்தின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஆபத்தை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ், தெப்சாங் சமவெளிப் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாக, எல்லையில் அமைந்துள்ள தெளலக் பெக் ஓல்டி விமானப் படை தளம் எளிதில் தாக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சீனாவுடன் பேச்சுவாா்த்தை என்ற பெயரில் மத்திய அரசு அனைத்தையும் வீணடித்துவிட்டது. நமது நாடு இதைவிட சிறப்பான நிலையை உருவாக்கியிருக்க முடியும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது ஹாட் ஸ்பிரிங்ஸ், காக்ரா, தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து படைகளைப் பின்வாங்க முடியாது என்று சீனா அறிவித்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையே, ராகுல் காந்தி சுட்டிக்காட்டி மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளாா்.

முன்னதாக, கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடா்பாக சீனாவுடன் இந்தியா நடத்திய பேச்சுவாா்த்தை எதிா்பாா்த்த பலனைத் தராதது ஏன் என்பது தொடா்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com