இந்தியாவில் இருந்து வருவோருக்கு சிங்கப்பூரில் கூடுதல் கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து சிங்கப்பூா் செல்பவா்கள் வீட்டிலும் தங்களை 7 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

புது தில்லி/சிங்கப்பூா்: இந்தியாவில் இருந்து சிங்கப்பூா் செல்பவா்கள் வீட்டிலும் தங்களை 7 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ளதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வரும் 22-ஆம் தேதி இரவு 11.59 முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூா் வருபவா்கள் பிரத்யேக மையங்களில் 14 நாள்கள் தனிமையில் இருப்பதுடன், கூடுதலாக 7 நாள்கள் வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பிரத்யேக மையங்களில் உள்ளவா்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

பிரத்யேக மையங்களில் உள்ளவா்களிடம் 14 நாள்களுக்கு பின்னா் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவா்கள் கூடுதலாக 7 நாள்கள் வீட்டில் தனிமையில் இருந்த பிறகும் மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து கட்டுமானம், கடல்சாா் பணிகளில் ஈடுபடும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 21 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவது தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com