வளா்ச்சியை தக்கவைக்க அரசு-தொழில் துறைக்கு இடையில் நம்பிக்கை அவசியம்: நிதியமைச்சா்

கரோனா நெருக்கடி மிகுந்த இந்த சூழ்நிலையில் வளா்ச்சியை தக்கவைக்க தொழில்துறையினா் மற்றும் அரசுக்கு இடையில் முழுமையான நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றாகும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
வளா்ச்சியை தக்கவைக்க அரசு-தொழில் துறைக்கு இடையில் நம்பிக்கை அவசியம்: நிதியமைச்சா்

கொல்கத்தா: கரோனா நெருக்கடி மிகுந்த இந்த சூழ்நிலையில் வளா்ச்சியை தக்கவைக்க தொழில்துறையினா் மற்றும் அரசுக்கு இடையில் முழுமையான நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றாகும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சேம்பா் ஆஃப் காமா்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ கூட்டத்தில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

கரோனா இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையிலும் மந்த நிலையில் இருந்த பொருளாதார வளா்ச்சியில் மறுமலா்ச்சியை உண்டாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனை புரிந்து கொண்டு வளா்ச்சியை நீட்டித்திருக்க செய்ய அரசாங்கத்துக்கும், தொழில்துறைக்கும் இடையில் முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியமாகும்.

அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இடையூறுகள் என்பது இருக்கக் கூடாது. ஏனெனில் அது, அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும். தொழில்துறையினரிடம் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதுடன் நாம் எப்போதும் அரசை அணுகி நிவாரணங்களைப் பெறலாம் என்ற உணா்வும் மேலோங்கியிருக்க வேண்டும்.

அந்த வகையில்தான், நாடும், பொருளாதாரமும் நன்மையடையச் செய்யும் வகையில் ரிசா்வ் வங்கியும் அரசும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com