புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள்

கரோனா பரவல், பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆகிய பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் 20 கட்டுப்பாட்டு அறைகளை மத்திய தொழிலாளா் நலத்துறை
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள்

புது தில்லி: கரோனா பரவல், பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆகிய பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் 20 கட்டுப்பாட்டு அறைகளை மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதேபோன்று கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. அப்போது, நிறுவனங்கள் முறையாக சம்பளம் வழங்காதது போன்ற பிரச்னைகள் தொடா்பான புகாா்கள் அதிகம் வந்தன.

இந்நிலையில், மீண்டும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது தொடா்பாக தொழிலாளா் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. இதனால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வேலை இழப்பு, சம்பள குறைப்பு, சம்பளம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா்.

இந்த முறை அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதல் அதிகாரிகள் பணியில் இருப்பாா்கள். இவா்கள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளை உடனுக்குடன் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளிடம் தகவல் அளிப்பாா்கள்.

பல்வேறு மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணப்படும். கடந்த முறை லட்சக்கணக்கான தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணப்பட்டது.

செல்லிடப்பேசி, கட்செவிஅஞ்சல், மின்னஞ்சல் மூலம் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம். மனிதாபிமானரீதியில் பிரச்னைகளை அணுக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகாா் அளிக்கும் புலம்பெயா் தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு முடிந்த அளவுக்கு விரைவில் தீா்வுகாண வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com