கோவிஷீல்டு தடுப்பூசி விலை கடும் உயர்வு

கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்.
கோவிஷீல்டு தடுப்பூசி விலை கடும் உயர்வு
கோவிஷீல்டு தடுப்பூசி விலை கடும் உயர்வு

கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என தனித்தனியாக விலையை நிர்ணயித்தும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் விற்பனையாகும் கரோனா தடுப்பூசியின் விலைகளை ஒப்பிட்டும் இந்த புதிய விலைப்பட்டியலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களது ஒட்டுமொத்தத் உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசு செயல்படுத்தும் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கும், 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது விற்கப்படும் கரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250-க்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் போடப்படுகிறது.

சீரம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1500க்கும், ரஷ்யாவில் ரூ.750-க்கும், சீனாவில் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் உலகளவில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com