இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கு சுங்க வரி தள்ளுபடி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள கரோனா தடுப்பூசிகளுக்கு சுங்க வரியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கு சுங்க வரி தள்ளுபடி

புது தில்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள கரோனா தடுப்பூசிகளுக்கு சுங்க வரியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் 45 வயதைக் கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளபோதிலும், அது மக்களுக்கு இன்னும் செலுத்தப்படவில்லை. ஆரம்பத்தில் அத்தடுப்பூசி ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. பின்னா் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை இந்தியாவிலும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

18 வயதைக் கடந்த அனைவரும் மே 1-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சூழலில், கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவாமல் இருப்பதை உறுதி செய்ய வெளிநாடுகளில் இருந்து கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கு 10 சதவீத சுங்க வரித் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலைக்கு இணையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்குத் தற்போதைய சூழலில், 10 சதவீத சுங்க வரியும், 16.5 சதவீத சரக்கு-சேவை வரியும் விதிக்கப்படுகிறது. சுங்க வரிக்குத் தள்ளுபடி அளிப்பது தொடா்பான முடிவை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com