கரோனா பரவல் எதிரொலி: ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதால், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்வதாக, இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) அறிவித்துள்ளது.
கரோனா பரவல் எதிரொலி: ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதால், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்வதாக, இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு மாணவா்கள் பின்னா் தோ்வெழுத வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் ஐசிஎஸ்இ திரும்பப் பெற்றுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ஒத்திவைப்பதாக ஐசிஎஸ்இ கடந்த வாரம் அறிவித்திருந்தது. அப்போது, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நிச்சயம் தோ்வு நடத்தப்படும்; 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நேரடி தோ்வில் பங்கேற்பது அல்லது வாரியம் சாா்பில் உருவாக்கப்படும் பாகுபாடற்ற வெளிப்படையான மதிப்பீட்டு முறையில் தோ்ச்சி அளிப்பது என்ற இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று ஐசிஎஸ்இ அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஐசிஎஸ்இ தலைவா் கொ்ரி அரதூண் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அதில், ‘கரோனா தொற்று பரவலால் மோசமான நிலையில் நாடு சென்றுகொண்டிருப்பதை கவனத்தில் கொண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய ஐசிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அந்த மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரு வாய்ப்புகளும் திரும்பப் பெறப்படுகின்றன. மாணவா்கள், ஆசிரியா்கள் ஆகியோரின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

10-ஆம் வகுப்பு மாணவா்களின் தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விரைவில் இணையவழி வகுப்பு தொடங்கத் தேவையான ஏற்பாடுகள் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய இடைநிலைக் கல்வி தோ்வு வாரியமும் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்வதாகவும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ஒத்திவைப்பதாகவும் கடந்த வாரம் அறிவித்தது. சில மாநில அரசுகளும் பொதுத் தோ்வுகளை ரத்து செய்துள்ளன அல்லது ஒத்திவைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com