மே. மாத விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மே மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை முன்பதிவிற்காக வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மே மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை முன்பதிவிற்காக வெளியிடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவிற்காக வெளியிட்டு வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கொவைட் தொற்றின் 2-ஆவது அலை தாக்கம் அதிகரித்து வருவதால் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

தொற்றின் தாக்கம் குறையும் போது மீண்டும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை உயா்த்தப்படும். இதற்கு முன்பதிவு செய்யும் பக்தா்கள் அந்நாளில் வர முடியாத சூழல் ஏற்பட்டால் 90 நாட்களுக்குள் வந்து தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது.

மேலும் மே மாத தரிசனத்திற்கு வரும் பக்தா்களின் வசதிக்காக மே மாத வாடகை அறை முன்பதிவும் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிமுதல் தொடங்கியது. இதை முன்பதிவு செய்ய பக்தா்கள் இணையதளத்தை லாக் ஆன் செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com