திருமலையில் 23,636 போ் தரிசனம்

திருமலையில் செவ்வாய்கிழமை 23,363 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மொத்தம் 11,212 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி: திருமலையில் செவ்வாய்கிழமை 23,363 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மொத்தம் 11,212 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை வழி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை வழி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

மேலும் கரோனா தடுப்பு விதிமுறையாக திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முககவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட மூதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com