கரோனா: சோதனை இல்லை, தடுப்பூசி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஐசியு இல்லை...மத்திய செயலகக் கட்டடத்துக்கு டெண்டரா? ராகுல் சாடல்

நாட்டில் கரோனாவால் மக்களுக்கு  ஆக்சிஜன் வசதிகள் கூட இல்லாத நிலையில் அரசுக்கு புதிய கட்டடத்திற்கு டெண்டர் விடுவதற்கு முன்னுரிமை அளிப்பதா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
‘மக்களுக்கு ஆக்சிஜன் இல்லை ஆனால் அரசுக்கு புதிய கட்டடம்’: ராகுல் விமர்சனம்

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பால் பலியானவர்களின் உடல்களை எரியூட்ட அவர்களது உறவினர்கள் வரிசையில் நிற்கும் காட்சிகள் பலரையும் கலங்கச் செய்துள்ளது. 

தில்லி லுட்யன்ஸ் பகுதியில், குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பகுதியில், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களின் அலுவலகம் ஆகிய இடம்பெறவுள்ளன. 

அவற்றின் ஒரரு பகுதியாக புதிதாக மைய தலைமையகத்திற்கு  ரூ.3408 கோடி மதிப்பில் 3 கட்டடங்கள் கட்டுவதற்கான ஏலத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com