மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்: மத்திய சுகாதாரத் துறை

மருந்து நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு வாங்கும் இரண்டு கரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் விலையும் ரூ.150 ஆகவே நீடிப்பதாகவும், மத்திய தொடர்ந்து மாநிலங்களக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்: மத்திய சுகாதாரத் துறை
மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்: மத்திய சுகாதாரத் துறை


புது தில்லி: மருந்து நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு வாங்கும் இரண்டு கரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் விலையும் ரூ.150 ஆகவே நீடிப்பதாகவும், மத்திய தொடர்ந்து மாநிலங்களக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறையின் சுட்டுரைப் பக்கத்தில், இரண்டு கரோனா தடுப்பூசிகளையும் மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையானது ஒரு டோஸ் ரூ.150 என்ற அளவிலேயே உள்ளது. மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, தேவைக்கேற்ப மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றில், நேற்று வெளியான செய்தியில், கோவிஷீல்டு மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  ஆனால், இந்த விலை உயர்வானது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சௌவூதி, வங்கதேசம், தென்னாப்ரிக்க நாடுகள் கொடுத்த கரோனா தடுப்பூசிக்கான விலையை விட மிக அதிகம். இந்தியாவிலேயே தயாரித்த மருந்து, ஆனால் இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படுவதா?  கரோனா தடுப்பூசியை ரூ.150க்கு விற்பனை செய்தாலே சீரம் நிறுவனத்துக்கு அதிகமான லாபம் கிடைக்கும். நிச்சயமாக விலை குறைக்கப்பட வேண்டும் என்று பதிவிடப்பட்டிருந்தது. 

இந்தச் செய்தியை மேற்கோள்காட்டி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய அரசு இன்று அதற்கு பதிலளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com