ராஜஸ்தானில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திங்கள்கிழமை முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும். ஆனால் வார இறுதி நாள்களில் மதுபானக் கடைகள் செயல்படாது என்று ராஜஸ்தான் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மளிகை, காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய விற்பனையைப் போலவே மதுபானக் கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசு கடுமையான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. மதுபானக் கடைகள், மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் தொடர்பான உத்தரவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com