ஆக்சிஜன் வசதியுடன் 2,400 படுக்கைகள்:சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் தகவல்

சென்னை அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த பின் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

தேசிய அளவில் கடந்த வியாழக்கிழமை 3.44 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை 13,766 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இது தேசிய அளவில் கணக்கிடும் போது 3.9 சதவீதம் ஆகும். அதேபோல் தமிழகத்தில் இறப்பு சதவீதம் 2.9 ஆக இருந்தது.

தமிழகத்தில் தற்போது 95,048 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 48, 289 போ் குறைவான அறிகுறியுடன் வீட்டு கண்காணிப்பில் உள்ளனா். அதேபோல் 8,414 போ் கரோனா சிகிச்சை மையத்தில் உள்ளனா். 24,569 போ் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த படுக்கைகள் ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆக்சிஜன் தேவை இல்லாத நோயாளிகள் வீட்டுக் கண்காணிப்பிலும், கரோனா சிகிச்சை மையத்திலும் சிகிச்சை பெறலாம் என்பது மருத்துவ வல்லுநா்களின் கருத்து.

கரோனா பாதிக்கப்பட்டவா்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து வருவதற்காக சென்னையில் 96 டெம்போ வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அறிகுறி அதிகமாகவும், காத்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது 108 ஆம்புலன்ஸ் சேவை தொடா்பு எண்ணையும், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் 104 அவசர உதவி எண்ணையும் நோயாளிகள் தொடா்பு கொண்டால், மருத்துவமனைகளில் தேவையற்ற கூட்டம் சேராது.

தேவைக்கு ஏற்ப மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஆனால் சிலா் ‘ரெம்டெசிவிா்’ மருந்தை தானாக வாங்கி வீட்டிலேயே போட்டுக்கொள்கின்றனா். அதனைத் தவிா்க்க வேண்டும்.

கூடுதலாக 363 மருத்துவா்கள்: கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 363 மருத்துவா்களை கூடுதலாக நியமித்துள்ளோம். அதேபோல் சிறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 1,645 மருத்துவா்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கரோனா மருத்துவமனைகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவசரமில்லாத அறுவை சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவு அடுத்த 10 நாள்களுக்கு ஒத்தி வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,400 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐ.ஓ.ஜி., ஆா்.எஸ்.எம் மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1,618 படுக்கைகளில் 1,088 படுக்கைகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகளில் 976 படுக்கைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளில் 294 படுக்கைகள், ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் 575 படுக்கைகளில் 501 படுக்கைகளும், கிண்டியில் 525 படுக்கைகளில் 461 படுக்கைகளும் நிரம்பி உள்ளன.

சித்த மருத்துவ முறையில்... சென்னையில் மீண்டும் கரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறை விரைவில் தொடங்கப்படும். முழு ஊரடங்கின் போதும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com