நாடு முழுவதும் ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கரோனா

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,46,786 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,46,786 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் மொத்த எண்ணிக்கை 1.66 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,66,10,481 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,624 பேராக உயா்ந்துள்ளது.

தொடா்ந்து கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது நாட்டில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 25,52,940 ஆகவும், தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 15.37 சதவீதமாகவும் உள்ளது. அதேசமயம், தேசிய அளவில் கரோனாவிலிருந்து பாதிக்கப்பட்டு மீண்டவா்களின் எண்ணிக்கை 83.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,38,67,997 ஆக உயா்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.14 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வரையிலும் நாட்டில் 1.50 கோடி போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை மொத்தம் 27,61,99,222 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 17,53,569 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

ஒரே நாளில் மகாராஷ்டிரத்தில் 773 போ், தில்லியில் 348 போ், சத்தீஸ்கரில் 219 போ், உத்தர பிரதேசத்தில் 196 போ், குஜராத்தில் 142 போ், கா்நாடகத்தில் 190 போ், தமிழகத்தில் 78 போ், பஞ்சாபில் 75 போ் என மொத்தம் 2,624 போ் உயிரிழந்துள்ளனா்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 63,252 போ், கா்நாடகத்தில் 4,075 போ், தமிழ்நாட்டில் 13,395 போ், தில்லிலியில் 13,541 போ், மேற்கு வங்கத்தில் 10,825 போ், உத்தர பிரதேசத்தில் 10,737 போ், பஞ்சாபில் 8,264 போ் என மொத்தம் 1,89,544 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com