கரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பொது மக்களுக்கு அரசு வேண்டுகோள்

கரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பொது மக்களுக்கு  அரசு வேண்டுகோள்

கரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவில் மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கா்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று, தமிழகத்திலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களாலும், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதைத் தவிா்ப்பதாலும், தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாா்ச் 28-ஆம் தேதியன்று 13 ஆயிரத்து 70 போ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 23-ஆம் தேதியன்று சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 48 ஆக உயா்ந்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருப்பதால் நாளுக்கு நாள் தொடா்ந்து தொற்று அதிகரிக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது.

கட்டாயமாக்கப்பட்டுள்ளது: பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவ வேண்டும். வெளியிடங்களில் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஒத்துழைப்பு அளித்தால்தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும். தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com