உ.பி.யில் மருத்துவரை அறைந்த செவிலியர்: 'மன அழுத்தமே காரணம்'

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் - மருத்துவர் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. 
உ.பி.யில் மருத்துவரை அறைந்த செவிலியர்: 'மன அழுத்தமே காரணம்'

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் - மருத்துவர் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. 

இந்த விடியோ சமூக வலைதளத்தில் பரவலாக பரவியதைத் தொடர்ந்து, வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவே இருவரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதாக மாவட்ட நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர் - செவிலியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செவிலியர் மருத்துவரின் கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பெண் செவிலியரை நோக்கி மருத்துவர் அடிக்க முற்பட்டார்.

இதனையடுத்து சுற்றியிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இது தொடர்பாக விடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இது தொடர்பாக மருத்துவர் மற்றும் செவிலியரிடம் மாவட்ட நீதிபதி ராம்ஜி மிர்ஷா விசாரணை மேற்கொண்டார். 

பின்னர் பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் வேலையின் மீது ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவே  அசம்பாவிதம் நேரிட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com