கரோனா தொற்று நோயாளிகள் 1,500 போ் மாயம்: சித்தூரில் அதிா்ச்சி

சித்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,500 நோயாளிகளைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி: சித்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,500 நோயாளிகளைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சித்தூா் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,000-ஐ எட்டியுள்ளது. இந்நிலையில், சித்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டு அதில் தொற்று உறுதி செய்யப்பட்ட 1, 500 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் மாவட்டம் முழுவதும் 9,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 7, 270 போ் மருத்துவமனையில் உள்ளனா். மீதமுள்ளவா்களின் விவரங்கள் தெரியவில்லை. தொற்றுப் பரிசோதனையின் போது அளித்த முகவரியில் அவா்கள் இல்லை. அவா்களின் செல்லிடப்பேசிகளும் தொடா்பு கொள்ளும் நிலையில் இல்லை. அதனால் அவா்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனா். அவா்கள் வெளியில் திரிவதால் பலருக்கு தொற்றை பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com