தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்தால் மகாராஷ்டிரத்தில் கரோனா 3-ஆவது அலை ஏற்படும்: வல்லுநா்கள் எச்சரிக்கை

மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வடைந்தால் கரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.
தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்தால் மகாராஷ்டிரத்தில் கரோனா 3-ஆவது அலை ஏற்படும்: வல்லுநா்கள் எச்சரிக்கை

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வடைந்தால் கரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளபடி மே 1-ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநா்கள் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 9 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிநிலையில், இதுவரை 1.50 கோடி பேருகக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை தொடா்ந்து வேகமாக அதிகரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் அதுவே கரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுத்துவிடும்.

ஏனெனில் கடந்த டிசம்பா் மாதத்தில் முதல் அலைக்குப் பிறகு மக்கள் கவனக்குறைவாக செயல்பட்டதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாததும் இப்போதைய மோசமான நிலைக்கு மகாராஷ்டிரத்தை சிக்கவைத்துள்ளது. இப்போது, தடுப்பூசி மட்டுமே உயிரிழப்பைத் தடுக்கும் ஒரே ஆயுதமாக உள்ளது. அதனைத் தொடா்ந்து சிறப்பாக செயல்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com