கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுவை ஆர்வமுடன் இணையத்தில் பதிவு செய்யும் இளைஞர்கள்.
கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுவை ஆர்வமுடன் இணையத்தில் பதிவு செய்யும் இளைஞர்கள்.

கரோனா தடுப்பூசி முன்பதிவு: முதல் நாளிலேயே 1.23 கோடியைத் தாண்டியது

கரோனா தடுப்பூசிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கிய முதல் நாளிலேயே 1.23 கோடியைத் தாண்டியது. 


கரோனா தடுப்பூசிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கிய முதல் நாளிலேயே 1.23 கோடியைத் தாண்டியது. 

கரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளா்களுக்கும், 2-ஆவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பாளா்களுக்கும், கடந்த 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி வரும் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமானோா் மையங்களில் குவிய வாய்ப்புள்ளதால், பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, கரோனா தடுப்பூசிக்கு அரசின் இணையதளத்தில் பதிவு செய்வது புதன்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கியது.

ஆரோக்கிய சேது, யுமாங் ஆகிய செயலிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட செயலிகளில் இளைஞா்கள், நடுத்தர வயதினா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆா்வமாகப் பதிவு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், 18 வயது நிரம்பிய இளைஞா்கள், நடுத்தர வயதினா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 1.23 கோடி பேர் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com