40 வயது நோயாளிக்கு படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவர்; பலனளிக்காத பரிதாபம்

மரணத் தருவாயில் இருந்த 40 வயது நோயாளிக்காக தனது மருத்துவமனை படுக்கையை விட்டுக் கொடுத்த 85 வயது முதியவர், வீடு திரும்பிய இரண்டு நாள்களில் மரணத்தைத் தழுவினார்.
மறிக்காத மரணம்: 40 வயது நோயாளிக்கு படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவருக்கு நேர்ந்த கொடுமை
மறிக்காத மரணம்: 40 வயது நோயாளிக்கு படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவருக்கு நேர்ந்த கொடுமை


மரணத் தருவாயில் இருந்த 40 வயது நோயாளிக்காக தனது மருத்துவமனை படுக்கையை விட்டுக் கொடுத்த 85 வயது முதியவர், வீடு திரும்பிய இரண்டு நாள்களில் மரணத்தைத் தழுவினார்.

நாக்பூர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் இந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் தவித்து வரும் தனது கணவருக்கு யாரேனும் ஒரு படுக்கையை கொடுத்து உதவுமாறு அவரது மனைவி கண்ணீர் மல்க கெஞ்சிக் கொண்டிருந்தார்.

முதுமை காரணமாக ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 85 வயது நாராயன் தபால்கர், இதைப் பார்த்து துயரம் அடைந்தார். ஆக்ஸிஜன் உதவியோடுதான் சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி அவர் தன்னை வீட்டுக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்தார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அவர் மருத்துவர்களிடம் பேசுகையில், எனக்கு இப்போது 85 வயதாகிறது, நான் எனது வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்துவிட்டேன். அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் முக்கியம். அவர்களது குழந்தைகளும் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்கள். தயவு கூர்ந்து எனது படுக்கையை அந்த நோயாளிக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டதும், எப்படியோ போராடி மருத்துவமனையில் படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்த தனது மகளையும் சமாதானம் செய்துவைத்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நாராயண் தபால்கார், மூன்று நாள்களில் மரணம் அடைந்தார்.

அதே வேளையில், நாராயண் யாருக்காக தனது படுக்கையை விட்டுக் கொடுத்தாரோ, அந்த நோயாளிக்கு அந்தப் படுக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், அவருக்கு முன்பிருந்தே காத்திருந்த மற்றொரு நோயாளிக்குத்தான் ஒதுக்கப்பட்டதாகவும், ஒரு படுக்கையை நோயாளி தாமாக முன் வந்து காலி செய்தாலும் கூட, அதனை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை மருத்துவமனைதான் முடிவு செய்யும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com