நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கரோனா: 3,645 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின்எண்ணிக்கை 3,79,257 -ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கரோனா: 3,645 பேர் பலி


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின்எண்ணிக்கை 3,79,257 -ஆக அதிகரித்துள்ளதையடுத்து, இதுவரை இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,83,76,524 ஆக உயா்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இது மிக உயர்ந்த ஒரு நாள் பாதிப்பாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,79,257 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரேநாளில் 3,645 போ் உயிரிழந்து விட்டனா். இதையடுத்து புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. 

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,50,86,878 ஆகும், அதே சமயம் இறப்பு விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது.

புதிதாக கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16.55 சதவீதமாக அதிகரித்துள்ளதன் மூலம் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 30,84,814 -ஆக உயா்ந்துள்ளன. தேசிய அளவில் 2,69,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து தேசிய அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,50,86,878  ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் குணமடைந்துள்ளவா்களின் எண்ணிக்கை 82.33 சதவீதமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 15,00,20,648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, ஏப்ரல் 28-ஆம் தேதி வரை 28,44,71,979 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரேநாளில் 17,68,190 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவா்களில் மகாராஷ்டிரம், தில்லி உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், கா்நாடகம் குஜராத், ஜாா்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com