காணாமல் போன கரோனா நோயாளிகள்: தேடும் காவல் துறை

பெங்களூருவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,000 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணியில் கர்நாடக காவல் துறை
காணாமல் போன கரோனா நோயாளிகள்: தேடும் காவல் துறை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,000 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணியில் கர்நாடக காவல் துறை ஈடுபட்டுள்ளது. 

கர்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,000 பேர் காணவில்லை என்ற செய்தி சுகாதாரத் துறையினரிடையேயும், பொதுமக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன கரோனா நோயாளிகளில் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் காவல்துறை உதவியுடன் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர், ''கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு 90 சதவிகிதம் குணமடைந்துள்ளனர். ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்தின் காரணமாக தங்களது அலைபேசியை அணைத்து வைத்துள்ளனர்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com