3 மாதங்களில் 500 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: ராஜ்நாத் சிங்

பி.எம். கேர்ஸ் நிதி மூலம் மூன்று மாதங்களில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலம் நாட்டில் 500 இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்
3 மாதங்களில் 500 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: ராஜ்நாத் சிங்

பி.எம். கேர்ஸ் நிதி மூலம் மூன்று மாதங்களில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலம் நாட்டில் 500 இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "டிஆர்டிஓ சார்பில்  "எம்ஓபி' தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை கொண்டு செல்வதில் இலகுரக விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனின் தற்போதைய நெருக்கடியை எதிர்த்துப் போராட உதவும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெங்களூரில் இயங்கி வரும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ் ஆகிய இரண்டு  நிறுவனங்களிலும் எம்ஓபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், 380 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்திலுள்ள ஆலைகளில் நிமிஷத்துக்கு 500 லிட்டர் திறன் கொண்ட 120 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். டிஆர்டிஓவின் "எம்ஓபி' தொழில்நுட்பம் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பு மூலம் 190 நோயாளிகளுக்குத் தேவைப்படும் வகையில், நிமிடத்திற்கு 5 லிட்டர் வீதம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மேலும் ஒரு நாளைக்கு 195 ஆக்சிஜன்  சிலிண்டர்களை உற்பத்தி செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com