நாடு முழுவதும் ஒரேநாளில் 3.60 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,60,960 பேராக அதிகரித்துள்ளதையடுத்து,

நாடு முழுவதும் ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,60,960 பேராக அதிகரித்துள்ளதையடுத்து, இதுவரை இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,60,960 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரேநாளில் 3,293 போ் உயிரிழந்து விட்டனா். இதையடுத்து புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் கடந்து விட்டது.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆகும், அதே சமயம் இறப்பு விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது.

புதிதாக கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16.55 சதவீதமாக அதிகரித்துள்ளதன் மூலம் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 29,78,709 ஆக உயா்ந்துள்ளன. தேசிய அளவில் கரோனா பாதிப்பால் குணமடைந்துள்ளவா்களின் எண்ணிக்கை 82.33 சதவீதமாகக் குறைந்துள்ளது.

புதிதாக கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,01,187 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, ஏப்ரல் 27-ஆம் தேதி வரை 28,27,03,789 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 17,23,912 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 895 போ், தில்லியில் 381 போ், உத்தர பிரதேசத்தில் 266 போ், சத்தீஸ்கரில் 246 போ், கா்நாடகத்தில் 180 போ், குஜராத்தில் 170 போ், ஜாா்கண்டில் 131 போ், ராஜஸ்தானில் 121 போ், பஞ்சாபில் 100 போ் என 3,293 போ் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனா்.

நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவா்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 66,179 போ், தில்லியில் 15,009 போ், கா்நாடகத்தில் 14,807 போ், தமிழகத்தில் 13,728 போ், உத்தர பிரதேசத்தில் 11,678 போ், மேற்கு வங்கத்தில் 11,082 போ், பஞ்சாபில் 8,630 போ், ஆந்திரத்தில் 7,800 போ், சத்தீஸ்கரில் 7,782 போ் என இதுவரை மொத்தம் 2,01,187 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com