ஆமதாபாத் கரோனா மருத்துவமனைக்கு விரைந்தது கடற்படை மருத்துவக் குழு

கரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு  மேற்கு கடற்படையைச் சேர்ந்த 57 பேர் கொண்ட கடற்படை மருத்துவக்குழு ஆமதாபாத்தில் உள்ள பிஎம் கரோனா பராமரிப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
ஆமதாபாத் கரோனா மருத்துவமனைக்கு விரைந்தது கடற்படை மருத்துவக் குழு
ஆமதாபாத் கரோனா மருத்துவமனைக்கு விரைந்தது கடற்படை மருத்துவக் குழு

புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு  மேற்கு கடற்படையைச் சேர்ந்த 57 பேர் கொண்ட கடற்படை மருத்துவக்குழு ஆமதாபாத்தில் உள்ள பிஎம் கரோனா பராமரிப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

நேற்று அகமதாபாத் சென்றடைந்த இந்தக் குழுவில், நான்கு மருத்துவர்கள், ஏழு செவிலியர், 26 மருத்துவப் பணியாளர்கள், 20 மருத்துவ உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர், கரோனா  தொற்று நெருக்கடியைச் சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். 

இந்தக் குழு அங்கு இரண்டு மாத காலத்திற்கு பணியாற்ற உள்ளனர். தேவைக்கேற்ப இந்தக் கால அளவு நீட்டிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com