கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்தி

கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  அனைவருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  அனைவருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் சிகிச்சை பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கரோனா சிகிச்சை பற்றாக்குறையால் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த துயரத்தில் நீங்கள் மட்டும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உங்களுடன் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் 3,498 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,08,330 பேர் இறந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com