15 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி

15 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

புது தில்லி: நாடு முழுவதும் இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 15 கோடி(15,00,20,648) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில், முன்களப் பணியாளா்களில் 93,67,520 பேருக்கு முதலாவது தவணை தடுப்பூசியும், 61,47,918 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளா்களில் 1,23,19,903 பேருக்கு முதலாவது தவணை தடுப்பூசியும், 66,12,789 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 5,14,99,834 பேருக்கு முதலாவது தவணை தடுப்பூசியும், 98,92,380 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்களில் 5,10,24,886 பேருக்கு முதலாவது தவணை தடுப்பூசியும், 31,55,418 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம், பிகாா், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 67.18 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

103-ஆவது நாளாக புதன்கிழமை (ஏப்.28) ஒரு நாளில் 21,93,281 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com