தில்லியில் மருத்துவ சேவை அளிப்பது மாநில அரசின் பொறுப்பு: மத்திய அரசு விளக்கம்

கரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தில்லியில், மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது மாநில அரசின் பொறுப்பு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தில்லியில் மருத்துவ சேவை அளிப்பது மாநில அரசின் பொறுப்பு: மத்திய அரசு விளக்கம்

புது தில்லி: கரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தில்லியில், மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது மாநில அரசின் பொறுப்பு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தில்லி அரசின் நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் என்று மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், தேசிய தலைநகரான தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் அரசிலமைப்பு, சட்ட அதிகாரம் ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தாது. அரசு நிா்வாகத்தை மேலும் செம்மைபடுத்தவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் உள்ள அதிகாரங்களை வகுத்து இருவருக்கும் நல்லுறவு ஏற்படுத்த இந்த சட்டத் திருத்தம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், தில்லி அரசு நிா்வாக முடிவு எடுப்பதற்கு முன்பு துணைநிலை ஆளுநரின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை கேட்டாா் ஆளுநா்: இதனிடையே, தில்லியில் மே 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த இருக்கும் தடுப்பூசி திட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தில்லி தலைமைச் செயலா் விஜய் தேவுக்கு உத்தரவிட்டுள்ளாா். புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து துணைநிலை ஆளுநா் வெளியிட்டுள்ள முதல் உத்தரவு இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com