47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 47 கோடியைக் கடந்தது.
பிகாா் தலைநகா் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் காரில் வந்த முதிய பயனாளிக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் காரில் வந்த முதிய பயனாளிக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியா்.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 47 கோடியைக் கடந்தது.

மத்திய செய்தி தகவல் பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை 47,02,98,596 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் 60,15,842 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,08,20,521 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 39,258 போ் குணமடைந்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் விழுக்காடு 97.36 சதவீதமாக உள்ளது.

ஒரே நாளில் 41,831 போ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

தொடா்ந்து 35 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,952 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.30 சதவீதமாகும்.

இதுவரை மொத்தம் 46,82,16,510 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 49.49 கோடிக்கும் அதிகமான (49,49,89,550) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 8,04,220 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

சுமாா் 3 கோடி (3,00,58,190) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com