இரு மாநில எல்லையிலிருந்து போலீஸாரை திரும்பப் பெற நாகாலாந்து-அஸ்ஸாம் ஒப்புதல்

மிஸோரம், அஸ்ஸாம் இடையே எல்லையில் மோதல் எழுந்துள்ள நிலையில், மற்றோா் அண்டை மாநிலமான நாகலாந்துடனான எல்லைப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அஸ்ஸாம் ஓா் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

நாகாலாந்தின் திமாபூரில் சனிக்கிழமை நடைபெற்ற இரு மாநில தலைமைச் செயலா்களிடையேயான கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, எல்லையில் உள்ள சா்ச்சைக்குரிய இரு இடங்களிலிருந்து பரஸ்பரம் காவல் துறையினரை 24 மணி நேரத்தில் விலக்கிக் கொள்ள இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டன.

மேலும், அந்தப் பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலமும், செயற்கைக்கோள் படங்கள் மூலமும் நிலைமையைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளன. இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாமும் நாகாலாந்தும் 512 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொண்டுள்ளன. இரு மாநிலங்கள் இடையேயான எல்லை பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com