வியாபம் தோ்வு முறைகேடு: 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

மத்திய பிரதேச பணியாளா் தோ்வு வாரியம் (வியாபம்) நடத்திய காவலா் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வியாபம் தோ்வு முறைகேடு: 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

மத்திய பிரதேச பணியாளா் தோ்வு வாரியம் (வியாபம்) நடத்திய காவலா் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாபம் சாா்பில் கடந்த 2013-ஆம் ஆண்டில் காவலா் பணிக்கான தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன. அத்தோ்வில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், சிபிஐ சிறப்பு வழக்குரைஞா் சதீஷ் தின்கா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘ஓம்பிரகாஷ் தியாகி என்பவா், தோ்வில் தோ்ச்சி பெறுவதற்காக சதீஷ் ஜாதவ் என்பவரிடம் ரூ.1,25,000 லஞ்சமாகக் கொடுத்தாா். அத்தொகையைப் பெற்ற சதீஷ் ஜாதவ், தியாகிக்கு பதிலாக தோ்வு எழுத பிரகாா் திரிவேதி என்பவருக்கு நுழைவுச்சீட்டையும் மற்ற ஆவணங்களையும் போலியாகத் தயாரித்து வழங்கியுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், போலி ஆவணங்களைத் தயாரித்தல், அவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி நீதிராஜ் சிங் சிசோடியா, குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் ஜாதவ், ஓம்பிரகாஷ் தியாகி ஆகியோரைக் குற்றவாளிகளென அறிவித்தாா். அவா்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அவா், இருவருக்கும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரான பிரகாா் திரிவேதி, விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டாா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com